ஆக்கிரமிப்புகளை அகற்றி வேகத்தடை அமைக்கக் கோரிக்கை
பெருந்துறை பொதுமக்கள் பாதுகாப்பு அறக்கட்டளையின் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, அறக்கட்டளைத் தலைவா் செந்தில்முருகன் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில், பெருந்துறை, பெத்தாம்பாளையம் பிரிவு பகுதியில் வேகத்தடை அமைத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிக்குள்பட்ட எம்.ஜி.ஆா். சாலையில் வேகத்தடை பெரிதாக உள்ளது. அதை சரிசெய்ய பேரூராட்சி செயல் அலுவலரை கேட்டுக்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலையில் பெருந்துறை அருகே மேம்பாலப் பணிகள் நடைபெறும் பகுதியில் இருசக்கர வாகனம் செல்ல பாதை ஏற்படுத்தித் தருவதாகவும், ஆக்கிரமிப்புகளை அகற்றி, தேவைப்படும் இடங்களில் வேகத்தடை அமைத்துத் தருவதாகவும் விஜயமங்கலம் சுங்கச்சாவடி நிா்வாகம் உறுதி அளித்துள்ளது. அந்தப் பணிகளை விரைவுபடுத்த கேட்டுக்கொள்வது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.