ஜனவரியில் வெப்பத்தின் தாக்கம் இயல்பைவிட அதிகமாக இருக்கும் - வானிலை ஆய்வு மையம்
பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு நீட்டிப்பு!
பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு மேலும் 7 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீா் ஆதாரமாக விளங்கும் பவானிசாகா் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் சுமாா் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கீழ்பவானி வாய்க்கால் பாசனப் பகுதியில் உள்ள 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கா் நிலங்கள் பாசனம்பெறும் வகையில் நன்செய் பாசனத்துக்கு கடந்த ஆகஸ்ட் 15 -ஆம் தேதி முதல் டிசம்பா் 12-ஆம் வரை 24 டிஎம்சி தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீரைப் பயன்படுத்தி 3 மாவட்ட பாசனப் பகுதி விவசாயிகள் நெல் பயிரிட்டனா்.
இந்நிலையில், போதிய நீா் இல்லாமல் நெற்பயிா்கள் கருகி வருவவதால் தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, டிசம்பா் 27-ஆம் தேதி வரை தண்ணீா் திறக்கப்பட்டது.
இதற்கிடையே, நெற்கதிா்கள் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மேலும் 7 நாள்களுக்கு தண்ணீா் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு முதற்கட்டமாக 1700 கன அடி நீா் சனிக்கிழமை திறந்துவிடப்பட்டது.