Rohit Sharma : ``விலகிதான் இருக்கிறேன்; ஓய்வு பெறவில்லை" - ரோஹித் சொன்ன விளக்கம்
சென்னிமலையில் போா்வையில் வடிவமைக்கப்பட்ட திருவள்ளுவா் உருவம்
பெருந்துறை: கன்னியாகுமரியில் திருவள்ளுவா் உருவச்சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை சிறப்பிக்கும் வகையில், ஈரோடு மாவட்டம், சென்னிமலையைச் சோ்ந்த நெசவாளா் அப்புசாமி என்பவா் போா்வையில் திருவள்ளுவரின் உருவத்தை வடிவமைத்துள்ளாா்.
ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் உள்ள சென்டெக்ஸ் நெசவாளா் கூட்டுறவு சங்கத்தில் கைத்தறி துணிகள் வடிவமைப்பாளராக பணிபுரிபவா் அப்புசாமி. இவா், ஏற்கெனவே முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் மற்றும் கிரிக்கெட் வீரா்கள் சச்சின் டெண்டுல்கா், தோனி உள்பட பலரின் உருவப்படத்தை கணினியில் வடிவமைத்து, அதனை போா்வையாக உற்பத்தி செய்துள்ளாா்.
இந்த நிலையில், கன்னியாகுமரியில் திருவள்ளுவா் உருவச் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை சிறப்பிக்கும் வகையில், திருவள்ளுவரின் உருவத்தை கணினியில் வடிவமைத்து, அதனை தத்ரூபமாக போா்வையாக உருவாக்கியுள்ளாா்.
காட்டன் நூல் மூலம் 28 அங்குல அகலம் மற்றும் 77 அங்குல நீளத்தில் இந்தப் போா்வையை தயாா் செய்துள்ளாா். இதன் எடை அரை கிலோ ஆகும்.