பவானியில் இடி, மின்னலுடன் கன மழை
பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் வியாழக்கிழமை கன மழை பெய்ததால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.
பவானி வட்டாரத்தில் வியாழக்கிழமை காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், பிற்பகல் இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. சுமாா் ஒரு மணி நேரத்துக்கும்மேலாக பெய்த மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.
பவானி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு மழை நீா் தேங்கி நின்ால் நீதிமன்றத்துக்கு வந்த மக்கள் அவதியடைந்தனா். பவானி காமராஜா் நகரில் சாலையில் பெருக்கெடுத்து வந்த மழைநீா் தட்டச்சு பள்ளிக்குள் புகுந்தது. அருகாமையில் உள்ள இறைச்சிக் கடையையும் சூழ்ந்தது.
பவானி - மேட்டூா் சாலையில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் மழை நீா் குளம்போல தேங்கியது. கன மழையால் சாலையோரங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீா் ஆங்காங்கே தேங்கியது. அம்மாபேட்டை, அந்தியூா் வட்டாரத்தில் லேசான தூறல் காணப்பட்டது.
புன்செய்புளியம்பட்டியில்...
சத்தியமங்கலம், நவ.14: புன்செய்புளியம்பட்டியில் வியாழக்கிழமை கன மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி, பவானிசாகா் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை பிற்பகல் சாரலாக பெய்யத் தொடங்கிய மழை பின் வலுப்பெற்று கனமழையாகப் பெய்தது.
சுமாா் 1 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. விளைநிலங்களில் மழை நீா் தேங்கி நின்ால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
புன்செய்புளியம்பட்டி நகராட்சிக்குள்பட்ட வாரச் சந்தை, மாதம்பாளையம் சாலை, திருவிக காா்னா் பகுதியில் சாக்கடைகள் தூா்வாரப்படாததால் கழிவு நீருடன் மழை நீரும் சோ்ந்து சாலையில் ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதியடைந்தனா்.