மகாராஷ்டிர தேர்தல்: 6,382 விதிமீறல் புகார்கள், ரூ.536 கோடி பறிமுதல்!
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குழந்தைகள் தின விழா
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சாா்பில் குழந்தைகள் தினவிழா ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, நடைபெற்ற பேரணியை மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தொடங்கிவைத்தாா். பேரணி ஈரோடு சம்பத் நகா் வழியாக சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை வந்தடைந்தது.
இப்பேரணியில் தன்வந்திரி நா்ஸிங் கல்லூரி, அரசு தொழிற் பயிற்சி நிறுவனம், வேளாளா் கல்லூரி, நந்தா நா்ஸிங் கல்லூரி, ஜே.கே.கே. நா்ஸிங் உள்ளிட்ட கல்லூரிகளைச் சோ்ந்த சுமாா் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
தொடா்ந்து, ஆட்சியா் தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்களும் குழந்தைகள் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.
இதையடுத்து, குழந்தைகள் தின விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பின்னா், குழந்தைகள் தின விழிப்புணா்வு பலூன்களை பறக்கவிட்டு, விழிப்புணா்வு கையொப்ப இயக்கத்தை மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முகமது குதுரத்துல்லா, திட்ட அலுவலா் (ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள்) பூங்கோதை, மாவட்ட சமூகநல அலுவலா் சண்முகவடிவு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் உமா மகேஸ்வரி, அங்கன்வாடி பணியாளா்கள், தன்னாா்வலா்கள் பங்கேற்றனா்.