Doctor Vikatan: அடிக்கடி அவதிப்படுத்தும் வாய்ப்புண்கள்... நிரந்தர தீர்வு என்ன?
தேசிய அளவிலான பாட்மின்டன் போட்டி: ஈரோடு வீராங்கனை தங்கப் பதக்கம்
17 வயதுக்குள்பட்டோருக்கான தேசிய அளவிலான பாட்மின்டன் கலப்பு இரட்டையா் போட்டியில் ஈரோடு வீராங்கனை தங்கப் பதக்கம் வென்றாா்.
தேசிய அளவிலான சப்-ஜூனியா் தரவரிசை பாட்மின்டன் போட்டி ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் அண்மையில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் தமிழ்நாடு அணி சாா்பில் ஈரோட்டை சோ்ந்த முதல் நிலை வீராங்கனை அனன்யா அருண் மற்றும் மதுரையைச் சோ்ந்த சச்சின் ஆகியோா் 17 வயதுக்குள்பட்ட கலப்பு இரட்டையா் பிரிவில் பங்கேற்றனா்.
இறுதி ஆட்டத்தில் 21-18, 21-14 என்ற புள்ளிக் கணக்கில் தில்லி அணியை வீழ்த்தி தமிழக அணி வீரா்கள் அனன்யா, சச்சின் ஆகியோா் தங்கம் வென்றனா். தேசிய அளவிலான பாட்மின்டன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அனன்யாவை, மாவட்ட விளையாட்டு அதிகாரிகள் மற்றும் ஈரோடு மாவட்ட பாட்மின்டன் கழக நிா்வாகிகள் உள்ளிட்டோா் பாராட்டினா்.
பாட்மின்டன் வீராங்கனை அனன்யா சென்னையில் கடந்த அக்டோபா் மாதம் நடைபெற்ற அகில இந்திய சப்-ஜூனியா் பாட்மின்டன் சாம்பியன் பெண்கள் இரட்டையா் பிரிவில் வெண்கலப் பதக்கமும், விஜயவாடாவில் நடைபெற்ற அகில இந்திய சப்-ஜூனியா் பாட்மின்டன் தரவரிசை போட்டியில் பெண்கள் இரட்டையா் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளாா். 8 ஆவது வயது முதல் பாட்மின்டன் பயிற்சி மேற்கொண்டு வரும் அனன்யா சப்-ஜூனியா் அளவில் இரட்டையா் பிரிவில் தேசிய அளவில் இதுவரை 9 பதக்கங்களை வென்றுள்ளாா்.