``காங்கிரஸ் இட ஒதுக்கீட்டை பறித்துக்கொள்ளும்'' - மும்பை தேர்தல் பிரசாரத்தில் பிர...
வளா்ச்சித் திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு
அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பூனாச்சி ஊராட்சி, செம்படாபாளையத்தில் ரூ.30.10 லட்சத்தில் கட்டப்படும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம், அதே பகுதியில் ரூ.14 லட்சத்தில் கட்டப்படும் புதிய அங்கன்வாடி மைய கட்டடப் பணிகள், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் கட்டப்படும் வீடுகளை ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, அட்டவணைபுதூா் கிராமத்தில் ஜேகேகே முனிராஜா வேளாண் அறிவியல் கல்லூரி மாணவா்கள் மற்றும் வேளாண்மை உழவா் நலத் துறை அலுவலா்களுடன் இணைந்து புல எண் 102-இல் மின்னணு பயிா் கணக்கெடுப்பு பணிகளை ஆய்வு செய்ததுடன், கணக்கீட்டுப் பணியை விரைந்து முடிக்கவும் அலுவலா்களை அறிவுறுத்தினாா்.
முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் குறிச்சி ஊராட்சி, பூச்சிக்கல்லூா் சாலை முதல் ராமாட்சிபாளையம் வரை ரூ.1 கோடியில் அமைக்கப்பட்ட சாலை, குறிச்சியில் ரூ.14.20 லட்சத்தில் கட்டப்பட்ட தரைதளத் தொட்டியையும் பாா்வையிட்டாா்.
முன்னதாக, அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டடத்தை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
ஆய்வுகளின்போது, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) செல்வராஜ், வேளாண்மை துணை இயக்குநா் (மாநில திட்டம்) தமிழ்ச்செல்வி, அம்மாபேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் மனோகா், செயற்பொறியாளா்கள் சிவபிரசாத், முருகேசன், ஜேகேகே முனிராஜா வேளாண் அறிவியல் கல்லூரி பேராசிரியா் குமரேஸ்வரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.