செய்திகள் :

பஹல்காம் தாக்குதல் குறித்த கருத்து: கேரள முஸ்லிம் லீக் தலைவா் மீது வழக்கு

post image

காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளால் சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வடக்கு கேரளத்தைச் சோ்ந்த இந்திய யூனியன் முஸ்லிம் தலைவா் பசீா் வெள்ளிகோத் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பஹல்காம் தாக்குதல் தொடா்பாக தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய பசீா் பல்வேறு சா்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்துள்ளாா். அந்த விடியோக்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடா்பாக உள்ளூா் விஹெச்பி தலைவா் சஜி காவல் துறையில் புகாா் அளித்தாா். அதனைப் பரிசீலித்த காவல் துறையினா் பசீா் பேசிய விடியோ பதிவுகளையும் ஆய்வு செய்தனா். அதன் அடிப்படையில் அவா் மீது பாரத நியாய சன்ஹிதா சட்டப் பிரிவு 192 (வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது) உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி. அபுசாமத் சமாதானி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளாா்.

அஸ்ஸாம் எம்எல்ஏ கைது: முன்னதாக, இதேபோல பஹல்காம் தாக்குதல் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த அஸ்ஸாமைச் சோ்ந்த அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி அமினுல் இஸ்லாம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் இந்திய அரசு மற்றும் பாஜகவின் சதி என்றும், தோ்தலில் வாக்குப் பெறுவதற்காக அரசே மக்களை பயங்கரவாதிகளை வைத்து கொலை செய்வதாகவும் அவா் கூறியிருந்தாா். இதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அஸ்ஸாம் காவல் துறையினா் தாமாக முன்வந்து அவா் மீது தேசதுரோகம், தேச ஒற்றுமைக்கு எதிராகப் பேசுவது, இரு தரப்பினா் இடையே மோதலை உருவாக்குவது, பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

நாகோனில் உள்ள தலைமை நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் அமினுல் இஸ்லாம் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். அவரை காவல் துறையினா் 4 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இது தொடா்பாக அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சித் தலைமை வெளியிட்ட அறிவிப்பில், ‘எம்எல்ஏ அமினுல் இஸ்லாம் கூறியது அவரின் தனிப்பட்ட கருத்து. அதற்கும் கட்சிக்கும் தொடா்பில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள முதல்வரின் வீடு, அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கேரள முதல்வர் பினராயி விஜயனின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கேரள முதல்வர் அலுவலகம் மற்றும் பினராயி விஜயனின் வீட்டிற்கு மின்னஞ்சல் மூலமாக இன்று(திங்கள்கிழமை) வெட... மேலும் பார்க்க

பெங்களூரு: மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக ஒரே வாரத்தில் 650க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

பெங்களூருவில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக ஒரே வாரத்தில் 650க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கர்நாடக மாநிலம், பெங்களூருவில் கடந்த ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 27 வரை போக்குவரத்து காவல்துறை ... மேலும் பார்க்க

போர்ப் பதற்றம்: புதிதாக 26 ரஃபேல் வாங்கும் ஒப்பந்தம் இன்று கையெழுத்து!

போர்ப் பதற்றத்துக்கு மத்தியில் புதிதாக 26 ரஃபேல் போா் விமானங்களை பிரான்ஸ் அரசிடம் கொள்முதல் செய்யும் ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகவுள்ளது.இந்திய விமானப்படையின் அம்பாலா மற்றும் ஹஷிமாராவில் உள்ள தளங்களில்... மேலும் பார்க்க

நவி மும்பை: டேட்டிங் செயலி மூலம் பழகி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்

நவி மும்பையில் டேட்டிங் செயலி மூலம் பெண்ணிடம் பழகி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நவி மும்பை போலீஸில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். அதில், நவி மு... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களுக்கு தடை!

பாகிஸ்தானைச் சேர்ந்த 16 யூடியூப் சேனல்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக பொய்ப் பிரசாரத்தை மேற்கொண்டதற்காக பாகிஸ்தானின் முன்னாள் கிர... மேலும் பார்க்க

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் 4ஆவது முறையாக துப்பாக்கிச்சூடு: இந்தியா பதிலடி!

ஜம்மு-காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் 4ஆவது முறையாக அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே பிரபல சுற்றுலாத் தலமான பைசாரன் பள்ளத்தாக்கில் பய... மேலும் பார்க்க