பாஜக மேயரின் வகுப்புவாதத்தால் சர்ச்சை!
சத்தீஸ்கரில் வகுப்புவாதத்தை நிலைநிறுத்துவேன் என்று கூறிய பாஜக மேயருக்கு சமூக ஊடகங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சத்தீஸ்கரில் சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இதனையடுத்து, வெள்ளிக்கிழமை பிலாஸ்பூரின் முங்கேலி நாகா திடலில் பூஜா விதானியின் மேயர் பதவியேற்பு விழா நடத்தப்பட்டது.
பதவியேற்பு விழாவில் சத்தியப் பிரமாணத்தின்போது, பூஜா விதானி தவறுதலாக, ’’இந்தியாவின் வகுப்புவாதத்தையும் ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவேன்’’ என்று கூறினார்.
மேயரின் இந்த செயல்பாட்டால் நிகழ்ச்சியில் சலசலப்பு ஏற்பட்டதையடுத்து, பின்னர் மீண்டும் இரண்டாவது முறையாக சத்தியப் பிரமாணம் மேற்கொள்ளப்பட்டது.
இறையாண்மைக்கு பதிலாக வகுப்புவாதம் என்று பாஜக மேயர் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஊடகங்களில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க:ஹரியாணா காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை: கட்சியினரை சந்தேகிக்கும் குடும்பத்தினர்!