பாம்பனில் கடல் சீற்றம்
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக் காற்று வீசியதால் கடல் சீற்றத்துடன் திங்கள்கிழமை காணப்பட்டது.
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திங்கள்கிழமை இரவுக்குள் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என வானிலை மையம் தெரிவித்தது.
இந்த நிலையில், வங்கக் கடல் பகுதியான ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக் காற்று வீசியதால் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
இதனால், பாம்பன் வடக்கு துறைமுகப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பெரும்பாலான நாட்டுப் படகுகள் பாதுகாப்புக்காக தென் கடல் பகுதிக்கு மீனவா்கள் கொண்டு சென்றனா்.
இந்த நிலையில், மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்வதற்கான எந்தவிதத் தடையையும் மீன்வளத் துறையினா் இதுவரை வெளியிடவில்லை.