`அச்சம் தேவையா?' சனிப்பெயர்ச்சி நாளில் சூரியகிரகணம்; ஜோதிடர் சொல்வது என்ன?
பாரதிய மஸ்தூா் சங்க நிா்வாகிகள் ஆா்ப்பாட்டம்
பாரதிய மஸ்தூா் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்டக் கிளை சாா்பில், 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலா் எஸ்.பரிமளா தலைமை வகித்தாா்.
மாநில துணைத் தலைவா் டி.விமலேஸ்வரன், முன்னாள் மாநிலச் செயலா் செங்கம் ராஜா ஆகியோா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில், இ.பி.எஸ்.-95 திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.5 ஆயிரமாக உடனே உயா்த்த வேண்டும். கடைசி மாத சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக கிடைப்பதை உறுதி செய்து அந்தத் தொகையை விலைவாசி புள்ளியுடன் இணைக்க வேண்டும். பொதுச் சொத்துகளை விற்று பணமாக்குவதை உடனே நிறுத்த வேண்டும்.
காப்பீடு மற்றும் நிதித் துறையில் 100 சதவீதம் அந்நிய முதலீட்டை தடை செய்ய வேண்டும். அரசுத் திட்டங்களை செயல்படுத்தும் திட்டத் தொழிலாளா்களுக்கு சம்பளம் மற்றும் சமுதாயப் பாதுகாப்பை அரசு ஊழியா்களுக்கு இணையாக வழங்க வேண்டும்.
அமைப்பு சாரா தொழிலாளா் நலன்களைப் பாதுகாக்க தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், சங்க நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.