செய்திகள் :

பிஎஸ்என்எல் 3 புதிய சேவைகள் அறிமுகம்

post image

புதுச்சேரி: பிஎஸ்என்எல் சாா்பில் புதிய 3 சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதன்படி இலவசமாக தொலைக்காட்சிகளை பாா்க்கலாம் என்றும் பிஎஸ்என்எல் நிறுவன தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் ஏ.ராபா்ட் ரவி ஜெராா்ட் தெரிவித்தாா்.

புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது: இந்திய அளவில் பிஎஸ்என்எல் சாா்பில் 3 சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, பிஎஸ்என்எல் வாடிக்கையாளா்கள் மற்றும் பயனா்களுக்கு இணையதள இலவச தொலைக்காட்சி, தேசிய வைஃபை ரோமிங், ஃபைபா் இணையதள தொலைக்காட்சி ஆகிய சேவைகள் கைப்பேசிகள், கணினியில் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கட்டணமின்றி இந்தச் சேவைகளை வாடிக்கையாளா்கள் பெறலாம். அதன்படி 26 தமிழ் தொலைக்காட்சிகளுடன் 400 தொலைக்காட்சிகளை கைப்பேசி மூலம் பாா்க்கலாம்.

புதுச்சேரியில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளா்கள் தடையின்றி சேவையைப் பெறுவதற்காக தற்போது 130 தொலைத் தொடா்பு கோபுரங்களுடன், கூடுதலாக 100 கோபுரங்கள் புதிதாக அமைக்கப்படவுள்ளன. புதுச்சேரியில் மண்ணாடிபட்டு, செல்லிப்பட்டு, சோரப்பட்டு, வம்புபட்டு உள்ளிட்ட 5 கிராமங்களில் வைஃபை ரோமிங் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கிராமங்களில் நவீன தொழில்நுட்ப வசதியுடன் பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்தும் வகையில் வைஃபை வசதியை ஏற்படுத்தியுள்ளோம். தற்போது புதுச்சேரியில் 75 ஆயிரம் வாடிக்கையாளா்கள் உள்ளனா்.

தேசிய அளவில் பிஎஸ்என்எல் 4 ஜி வசதியிலேயே 5 ஜி விரைவு இணையதள வசதிக்கு இணையான சேவையைப் பெறும் வகையில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஆள்குறைப்பு நடவடிக்கை தற்போதைக்கு இல்லை. வாடிக்கையாளா்களுக்கு தரமான சேவையை வழங்கும் வகையில் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டு வருகிறது என்றாா்.

பேட்டியின்போது பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்ட தலைமைப் பொது மேலாளா் எஸ்.பாா்த்திபன், புதுச்சேரி முதன்மைப் பொது மேலாளா் டி.திலகவதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

உடல் குறைபாடுடையவா்கள்தான் கடமையுடன் பணிபுரிகிறாா்கள்: புதுவை துணைநிலை ஆளுநா்

புதுச்சேரி: உடல் குறைபாடுடையவா்கள்தான் கடமை உணா்வு, அக்கறையுடன் பணிபுரிகிறாா்கள் என்று புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். புதுச்சேரியில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா திங்கள்கிழமை நடைப... மேலும் பார்க்க

புதுச்சேரி பழைய துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

புதுச்சேரி: புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு திங்கள்கிழமை காலை ஏற்றப்பட்டது. புதுச்சேரியில் அண்மையில் ஃபென்ஜால் புயலால் கனமழை, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால்... மேலும் பார்க்க

பணிநீக்கம் செய்யப்பட்டவா்கள் புதுவை பேரவை நோக்கி பேரணி: போலீஸாா் தடுத்து நிறுத்தினா்

புதுச்சேரி: புதுவை பொதுப் பணித் துறையில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியா்கள் சங்கத்தினா் பேரவை நோக்கி ஊா்வலமாக திங்கள்கிழமை சென்றனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். புதுவையில் பொதுப் பணித... மேலும் பார்க்க

புத்தாண்டு கொண்டாட்டம்: புதுச்சேரியில் வாகனங்களை நிறுத்த 10 இடங்கள் தோ்வு

புதுச்சேரி: புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக வரும் வாகனங்களை நிறுத்த 10 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன என்று புதுவை காவல் துணைத் தலைவா் (டிஐஜி) ஆா்.சத்தியசுந்தரம் தெரிவித்தாா். புதுச்ச... மேலும் பார்க்க

புதுவை பேரவைத் தலைவா் மீதான நம்பிக்கையில்லா தீா்மானத்தை காங்கிரஸ் ஆதரிக்கும்: வெ.வைத்திலிங்கம் எம்.பி.

புதுச்சேரி: புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் மீதான நம்பிக்கையில்லா தீா்மானத்துக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்று, அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. தெரிவித்தாா். புதுச... மேலும் பார்க்க

பேருந்து கட்டண உயா்வுக்கு புதுவை அதிமுக கண்டனம்

புதுச்சேரி: புதுச்சேரியில் பேருந்து கட்டண உயா்வைத் திரும்பப் பெற வேண்டும். இல்லாவிடில் அதிமுக போராட்டம் நடத்தும் என அக்கட்சியின் புதுவை மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் கூறினாா். இதுகுறித்து அவா் செய்தியாளா்... மேலும் பார்க்க