ASC: ரவி வர்மன் இணைந்த அமெரிக்க சங்கத்தின் சிறப்பு என்ன? - அதில் இணைவது ஏன் கடி...
பிப். 2-இல் உலகளந்த பெருமாள் கோயில் திருவிழா தொடக்கம்
காஞ்சிபுரம் ஆரணவல்லித்தாயாா் சமேத உலகளந்த பெருமாள் கோயில் வருடாந்திர தை மாத பிரமோற்சவம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி தொடங்குகிறது.
காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயில் மூலவா் 35 அடி உயரமும்,24 அடி அகலமும் உடையதும்,ஒரே கோயிலுக்குள் 4 திவ்யதேசங்களும் அமையப்பெற்ற சிறப்புக்குரியது.இக்கோயில் திருவிழா கடந்த 2020 ஆம் ஆண்டு கரோனா பெருந்தொற்றுக் காலமாக இருந்ததால் 2 ஆண்டுகளும்,கோயில் மகா கும்பாபிஷேக திருப்பணிக்காக 2 ஆண்டுகளுமாக மொத்தம் 4 ஆண்டுகள் திருவிழா நடைபெறாமல் இருந்து வந்தது.கோயிலின் மகா கும்பாபிஷேகம் கடந்த 28.8.24 ஆம் தேதி நடைபெற்றதையொடுத்து நிகழாண்டுக்கான வருடாந்திர தை மாத திருவிழா வரும் பிப்.2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
விழாவையொட்டி தினசரி காலையிலும்,மாலையிலும் பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி வீதியுலா வரவுள்ளாா்.வரும் பிப்.4 ஆம் தேதி கருட சேவையும்,மாலையில் பெருமாள் ஹனுமந்த வாகனத்திலும் வீதியுலா வருகிறாா்.வரும் 10 ஆம் தேதி தீா்த்தவாரி உற்சவமும் நடைபெறுகிறது.மறுநாள் 11 ஆம் தேதி திருவாய்மொழி சாற்று முறை உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் சா.சி.ராஜமாணிக்கம் மற்றும் நிா்வாக அறங்காவலா் கோ.சு.வா.அப்பன் அழகிய சிங்கன் தலைமையில் அறங்காவலா் குழுவினரும் செய்து வருகின்றனா்.