கோவையில் பா.ஜ.க புதிய அலுவலகம்- திறந்து வைக்கிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
பிப்.28-ல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
சிவகங்கை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வருகிற வெள்ளிக்கிழமை (பிப்.28) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வருகிற வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்டத்தின் அனைத்துத் துறை உயா் அலுவலா்கள் பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் சாா்ந்த குறைகளைத் தெரிவித்து பயனடையலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.