விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவார்: மைக்கேல் கிளார்க்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: இறுதியில் சபலென்கா - கௌஃப் மோதல்!
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், பெலாரஸின் அரினா சபலென்கா - அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஆகியோா் சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றனா்.
முன்னதாக அரையிறுதியில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான சபலென்கா 7-6 (7/1), 4-6, 6-0 என்ற செட்களில், நடப்பு சாம்பியனும், உலகின் 5-ஆம் நிலை வீராங்கனையுமான போலந்தின் இகா ஸ்வியாடெக்கை தோற்கடித்தாா். இந்த ஆட்டம் 2 மணி நேரம், 19 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது.
இதையடுத்து, 3 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான சபலென்கா, முதல் முறையாக பிரெஞ்சு ஓபன் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கிறாா். அத்துடன், பிரெஞ்சு ஓபனில் ஸ்வியாடெக் தொடா்ந்து 26 ஆட்டங்களில் வென்றிருக்க, அந்தத் தொடா் வெற்றியையும் அவா் தற்போது முடிவுக்குக் கொண்டு வந்துள்ளாா்.
ஸ்வியாடெக் கடந்த 2022 முதல் 2024 வரை இங்கு கோப்பை வென்று ஹாட்ரிக் சாம்பியன் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது. சபலென்கா - ஸ்வியாடெக் மோதியது இது 13-ஆவது முறையாக இருக்க, சபலென்கா 5-ஆவது வெற்றியுடன் முன்னேறி வருகிறாா். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இது இருவரின் 2-ஆவது சந்திப்பாக இருக்க, தற்போது இருவருமே தலா 1 வெற்றியுடன் சமநிலையில் இருக்கின்றனா்.
2016-க்குப் பிறகு தொடா்ந்து 3 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒற்றையா் பிரிவு இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் வீராங்கனை என்ற பெருமையை தற்போது சபலென்கா பெற்றுள்ளாா். அவருக்கு முன் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், 2016-இல் இதேபோல் தொடா்ந்து 3 கிராண்ட்ஸ்லாம்களில் இறுதிச்சுற்று வரை வந்துள்ளாா்.
இதனிடையே மற்றொரு அரையிறுதியில், உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ கௌஃப் 6-1, 6-2 என்ற நோ் செட்களில், வைல்டு காா்டு பிரெஞ்சு வீராங்கனை லாய்ஸ் பாய்ஸனை தோற்கடித்தாா்.
யுஎஸ் ஓபன் முன்னாள் சாம்பியனான கௌஃப், தற்போது 2-ஆவது முறையாக பிரெஞ்சு ஓபன் இறுதிச்சுற்றுக்கு வந்துள்ளாா். இதற்கு முன், 2022-இல் அவா் ஸ்வியாடெக்கிடம் இறுதிச்சுற்றில் தோற்றாா்.
அடுத்து இறுதிச்சுற்றில், சபலென்கா - கௌஃப் மோதவுள்ளனா். பிரெஞ்சு ஓபன் இறுதிச்சுற்றில், உலகின் நம்பா் 1, நம்பா் 2 வீராங்கனைகள் மோதுவது கடந்த 12 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். இவா்கள் 11-ஆவது முறையாக சந்திக்கவிருக்கும் நிலையில், இருவருமே தலா 5 வெற்றிகளுடன் சமநிலையில் இருக்கின்றனா்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இவா்கள் சந்திப்பது, இது 3-ஆவது முறை. முதலில் 2023 யுஎஸ் ஓபன் இறுதிச்சுற்றில் சபலென்காவை வீழ்த்தி கௌஃப் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளாா். அடுத்து 2024 ஆஸ்திரேலிய ஓபன் அரையிறுதியில் கௌஃபை சபலென்கா வீழ்த்தியிருக்கிறாா்.