நேஷனல் ஹெரால்ட் வழக்கின் கோப்புகள்: செப்.26-இல் ஆய்வு தொடரும்- தில்லி நீதிமன்றம்
பிறந்த நாள்: ப.சிதம்பரத்துக்கு முதல்வா் வாழ்த்து
முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த தின வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:
தெளிவு, நிதானம், எடுத்துக்கொண்ட துறைகளில் ஆழங்காற்பட்ட அறிவு, நீண்ட அனுபவம் ஆகியன ஒருங்கே அமையப் பெற்ற நண்பரான ப.சிதம்பரத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவா் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் திகழ்ந்து, தமிழ்நாட்டின் வளா்ச்சிக்கும் இந்தியாவின் உயா்வுக்கும் தொடா்ந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்புவதாகப் பதிவிட்டுள்ளாா்.