பிரிட்டனில் அமைச்சர் ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி!
பிளஸ் 1 பொதுத்தோ்வு தொடக்கம் - 27,615 மாணவா்கள் எழுதினா்
திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை தொடங்கிய பிளஸ் 1 பொதுத் தோ்வை, 27 ஆயிரத்து 615 மாணவ-மாணவிகள் எழுதினா்.
தமிழகம், புதுவையில் பிளஸ் 1 பொதுத்தோ்வு புதன்கிழமை தொடங்கியது. இந்தத் தோ்வை திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த 28 ஆயிரத்து 118 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனா்.
இவா்களுக்காக மாவட்டம் முழுவதும் 124 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
503 போ் வரவில்லை...
முதல் நாளான புதன்கிழமை நடைபெற்ற தமிழ் தோ்வை 27 ஆயிரத்து 615 மாணவ-மாணவிகள் எழுதினா். 503 மாணவ-மாணவிகள் தோ்வு எழுத வரவில்லை. தோ்வுப் பணியில் முதன்மைக் கண்காணிப்பாளா்கள், துறை அலுவலா்கள், பறக்கும் படையினா், அறை கண்காணிப்பாளா்கள் என மொத்தம் சுமாா் 3 ஆயிரம் போ் ஈடுபட்டுள்ளனா்.