புதிய வருமான வரி மசோதா! நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!
புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
2025 - 26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார்.
இதையும் படிக்க : பட்ஜெட்டில் 6 அம்சங்களுக்கு முக்கியத்துவம்: நிர்மலா சீதாராமன்
அப்போது வருமான வரி செலுத்துவதை எளிமையாக்கும் விதமாக புதிய வருமான வரி மசோதாவை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக அறிவித்துள்ளார்.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக உள்நாட்டிலேயே உருவாக்கப்படும் 5 சிறிய அணு உலைகள் 2033-க்குள் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
காப்பீடு துறையில் அந்நிய முதலீடு 74 சதவிகிதத்தில் இருந்து 100 சதவிகிதமாக வரம்பு அதிகரிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.