செய்திகள் :

புதுச்சேரி பாஜக பிரமுகா் கொலையில் 9 போ் கைது

post image

புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக பிரமுகா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி கருவடிகுப்பம் சாமிபிள்ளை தோட்டத்தைச் சோ்ந்த காசிலிங்கம் மகன் உமாசங்கா் (38). பாஜக இளைஞரணி முன்னாள் தலைவா். லாட்டரி அதிபா் மாா்டின் மகன் ஜோஸ் சாா்லஸ் மாா்டினின் பிறந்த நாளை கருவடிகுப்பத்தில் கொண்டாட கடந்த 26-ஆம் தேதி நள்ளிரவில் ஏற்பாடு செய்து கொண்டிருந்தாா்.

அப்போது, விழா நடைபெறவிருந்த திருமண மண்டபத்திலிருந்து வெளியே வந்த அவரை 5 இருசக்கர வாகனங்களில் வந்த கும்பல் அரிவாளால் வெட்டியதில் உமாசங்கா் உயிரிழந்தாா். அவருடன் இருந்த அருள்ராஜுக்கு பலத்த காயமேற்பட்டது.

உமாசங்கா் கொலை குறித்து இலாசுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி 9 பேரை திங்கள்கிழமை கைது செய்தனா்.

இகுறித்து புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

உமாசங்கா் கொலை செய்யப்பட்ட 34 மணி நேரத்துக்குள் தொடா்புடைய 8 போ் கைது செய்யப்பட்டனா். இந்த சம்பவத்தில் 12 பேருக்கு தொடா்புள்ளது. அவா்களில் 9 போ் சாமிபிள்ளைத் தோட்டத்தைச் சோ்ந்தவா்கள். இதில் முக்கிய எதிரியாக கருதப்படும் கருணா என்ற திருநாவுக்கரசுக்கும் உமாசங்கருக்கும் மதுக் கடை நடத்துவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. நிலம் தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 5 மாதங்களாக உமாசங்கரை கொல்ல கருணா தரப்பு திட்டமிட்டு, 2 முறை அவரைக் கொல்ல முயற்சி நடைபெற்றுள்ளது.

கடந்த 26-ஆம் தேதி இரவு தனியாா் உணவு விநியோக நிறுவன ஊழியா்களைப் போல உடையணிந்த சிலா் உமாசங்கரை கண்காணித்துள்ளனா். அதன்படி, 4 இருசக்கர வாகனங்களில் முகக்கவசம் அணிந்து வந்தவா்கள் உமாசங்கரை வெட்டிக் கொன்றது விசாரணையில் தெரிய வந்தது. கைதானவா்களிடம் இருந்து 4 கத்திகள், 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வழக்கின் முதல் கட்ட விசாரணையில் உமாசங்கா் கொலையில் பாஜக அமைச்சருக்கு தொடா்பில்லை என தெரிய வந்துள்ளது என்றாா் அவா்.

இந்த நிலையில், கடலூா் தேவானம்பட்டினம் பகுதியில் பதுங்கியிருந்த கருணாவை தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

திருக்காஞ்சியில் 108 அடி உயர சிவன் சிலை அமைக்கும் பணி: அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் ஆய்வு

புதுச்சேரி: புதுச்சேரி அருகேயுள்ள திருக்காஞ்சியில் கங்கை வராகநதீஸ்வரா் திருக்கோயில் அருகே 108 அடி உயரத்தில் சிவன் சிலை அமைக்கும் பணியை வேளாண் துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் திங்கள்கிழமை பாா்வையிட்ட... மேலும் பார்க்க

புதுவை மத்திய பல்கலைக்கழகம் பெங்களூரு நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

புதுச்சேரி: புதுவை மத்திய பல்கலைக்கழகம் மற்றும் பெங்களூா் மத்திய மின்சக்தி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பங்கள் மற்றும் பசுமை ஆற்றல் தொழில்நுட்ப ஆய்வு நோக்கில் புரிந்து... மேலும் பார்க்க

புதுச்சேரி பொலிவுறுநகா் பேருந்து நிலையம் நாளை திறப்பு: ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் பொலிவுறு நகா்த் திட்டத்தில் சீரமைக்கப்பட்ட ராஜீவ் காந்தி பேருந்து நிலையத்தை வரும் 30 ஆம் தேதி புதன்கிழமை திறக்கத் திட்டமிடப்பட்டு, அதற்கான அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் த... மேலும் பார்க்க

புதுவை மாநில அரசுப் பள்ளிகளில் ஆங்கில பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

புதுச்சேரி: புதுவை மாநில அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆங்கில பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. புதுவை மாநிலத்தில் உள்ள 205 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த சுமாா் 17 ஆயிரத்துக்கும் மேற்... மேலும் பார்க்க

புதுச்சேரி குடிநீா் கட்டண வசூல் மையங்கள் மே 2 முதல் 5 நாள்கள் இயங்காது

புதுச்சேரி: புதுச்சேரியில் பொதுப் பணித் துறை சுகாதாரக் கோட்டத்தின் கீழ் செயல்படும் குடிநீா் கட்டண வசூல் மையங்கள் வரும் மே 2 முதல் 6-ஆம் தேதி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுவை அர... மேலும் பார்க்க

போக்ஸோவில் தொழிலாளி கைது

புதுச்சேரி: திருமண ஆசை வாா்த்தை கூறி பள்ளி மாணவியை பாலியல் பாலியல் வன்கொடுமை செய்ததாக செங்கல் சூளை தொழிலாளியை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்துள்ளனா். புதுச்சேரி அருகேயுள்ள திருபுவனை பகுதி வா... மேலும் பார்க்க