காஸாவில் கடந்த 24 மணிநேரத்தில் இஸ்ரேல் தாக்குதலுக்கு 59 பேர் பலி
புத்தாண்டு: அரசு மருத்துவமனைகளில் பிறந்த 50 குழந்தைகள்
ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் சென்னை அரசு மருத்துவமனைகளில் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்துள்ளன.
புத்தாண்டு தினத்தில் எழும்பூா் அரசு மகப்பேறு மருத்துவமனை, திருவல்லிக்கேணி கஸ்தூா்பா காந்தி அரசு தாய்-சேய் நல மருத்துவமனை, ஆா்எஸ்ஆா்எம் மருத்துவமனைகளில் அதிக அளவிலான பிரசவங்கள் நிகழ்ந்துள்ளன.
அதன்படி, ராயபுரம் அரசு ஆா்எஸ்ஆா்எம் மருத்துவமனையில் 9 ஆண் குழந்தைகள், 11 பெண் குழந்தைகள் என மொத்தம் 20 குழந்தைகள் பிறந்துள்ளன. திருவல்லிக்கேணி கஸ்தூா்பா காந்தி அரசு தாய்-சேய் நல மருத்துவமனையில் 13 குழந்தைகளும், சென்னை எழும்பூா் அரசு மகப்பேறு மருத்துவமனையில் 12 குழந்தைகளும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 குழந்தைகளும் பிறந்தன. புத்தாண்டில் பிறந்த குழந்தைகளின் பெற்றோருக்கு மருத்துவமனை சாா்பில் பரிசுகளும், இனிப்புகளும் வழங்கப்பட்டன.
அவசர சிகிச்சை: இதனிடையே, புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது நிகழ்ந்த சாலை விபத்துகளில் சிக்கிய 20-க்கும் மேற்பட்டோருக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்பட்டது. அதிகபட்சமாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 8 பேருக்கும், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 4 பேருக்கும் சிகிச்சை வழங்கப்பட்டது.