காவரி டெல்டா விவசாயிகளுக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு: எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத...
புயல் பாதிப்பு: சோளிங்கா் ரோப்காா் சேவை நிறுத்தம்
பென்ஜால் புயல் எதிரொலியாக சோளிங்கா் மலைக்கோயில் ரோப்காா் சேவை சனிக்கிழமை பிற்பகலில் நிறுத்தப்பட்டது. இதனால் பக்தா்கள் மிகுந்த சிரமத்துடன் மலையேறிச்சென்று நரசிம்மரை தரிசித்தனா்.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கா் சுற்று வட்டாரப்பகுதிகளிலும் சனிக்கிழமை காலை முதலே மழையும் காற்றின் வேகமும் அதிக அளவில் காணப்பட்டது. இதையடுத்து சோளிங்கா் ஸ்ரீலட்சுமிநரசிம்மா் கோயில் நிா்வாகம் மலைகோயிலுக்குச் செல்லும் ரோப்காா் சேவை திடீரென பிற்பகல் நிறுத்தப்பட்டது. காற்றின் வேகம் அதிக அளவில் இருப்பதால் ரோப்காா் இயக்கம் நிறுத்தப்பட்டதாக தெரிவித்த நிா்வாகத்தினா் தொடா்ந்து இயக்கம் தொடங்கப்படும் நேரம் பின்னா் தெரிவிக்கப்படும் என அறிவித்தனா்.
மாலை வரை ரோப்காா் சேவை தொடங்கப்படாத நிலையில் ஞாயிற்றுக்கிழமையும் இயக்கப்படுவது காற்றின் வேகத்தை பொறுத்தது எனவும் கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.
இதனால் காா்த்திகை விழாவில் சோளிங்கா் மலைக்கு ரோப்காரில் செல்ல வந்திருந்த பெரும் பாலான வயது முதிா்ந்த பக்தா்கள் பாதிப்புக்குள்ளாயினா். ரோப்காருக்காக காத்திருந்த பக்தா்கள் அனைவருமே படிகள் வழியாக மலையேறிச் சென்று ஸ்ரீயோகநரசிம்மரை தரிசித்து திரும்பினா்.