சேத விவரங்கள் கணக்கெடுக்கப்பட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்படும்: புதுவை மு...
நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கக் கூட்டம்
ஆற்காடு உள்கோட்ட நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, உள்கோட்டத் தலைவா் ஜி.பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். செயலாளா் கோவிந்தராஜுலு வரவேற்றாா். மாவட்டப் பொருளாளா் ஜெ. வெங்கடேசன், மாநில செயற்குழு உறுப்பினா் டி.விநாயகம், டி.சேட்டு, பி.சம்பத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில துணைப் பொதுச் செயலாளா் கா.பெருமாள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா்.
இதில், நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள 7,500-க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாவட்ட துணைத் தலைவா்கள் கே.லோகநாதன், எம். நமச்சிவாயன், மாவட்ட இணைச் செயலா்கள் பி.ரவி, என்.ரேணு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பொருளாளா் எம். சரவணன் நன்றி கூறினாா்.