மாநிலக் கல்லூரியில் ரூ.21.60 கோடியில் சிறப்பு மாணவர், மாணவியர் விடுதி: முதல்வர் ...
புஷ்பா - 2 மேக்கிங் விடியோ!
புஷ்பா - 2 திரைப்படத்தின் மேக்கிங் விடியோ வெளியாகியுள்ளது.
நடிகர் அல்லு அர்ஜுன் - சுகுமார் கூட்டணியில் உருவான புஷ்பா - 2 படத்தின் மேல் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படம் நாளை (டிச. 4) இரவு 9.30 மணியிலிருந்து தெலங்கானா உள்பட சில பகுதியில் வெளியாகிறது.
பல திரையரங்களும் டிக்கெட் விலையைக் கடுமையாக உயர்த்தியுள்ளனர். மேலும், புரமோஷன்களும் தீவிரமாக நடைபெற்றதால் இப்படம் ரூ. 1000 கோடி வணிகத்தை அடையும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: புஷ்பா - 3 அறிவிப்புடன் முடியும் புஷ்பா- 2!
இந்த நிலையில், படத்தின் மேக்கிங் விடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. புஷ்பா - 1, புஷ்பா -2 இரண்டு படத்தையும் எடுத்து வெளியிட 5 ஆண்டுகளானது குறிப்பிடத்தக்கது.