கொத்தட்டை சுங்கச்சாவடி: தனியார் பேருந்து உரிமையாளர்கள் போராட்டம்
பெங்களூரை வீழ்த்தியது தமிழ் தலைவாஸ்
புரோ கபடி லீக் போட்டியின் 127-ஆவது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் 42-32 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
தமிழ் தலைவாஸ் 23 ரெய்டு புள்ளிகள், 14 டேக்கிள் புள்ளிகள், 4 ஆல் அவுட் புள்ளிகள், 1 எக்ஸ்ட்ரா புள்ளி பெற்றது. அணியின் தரப்பில் அதிகபட்சமாக, ரெய்டா் ஹிமான்ஷு 13 புள்ளிகள் கைப்பற்றினாா்.
பெங்களூரு அணி 22 ரெய்டு புள்ளிகள், 10 டேக்கிள் புள்ளிகள் மட்டுமே வென்றது. அந்த அணிக்காக ரெய்டா் சுஷில் 15 புள்ளிகள் கைப்பற்றியது பலனில்லாமல் போனது. இதனிடையே மற்றொரு ஆட்டத்தில் ஹரியாணா ஸ்டீலா்ஸ் 47-30 என்ற கணக்கில் யு மும்பாவை வென்றது.
போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2 ஆட்டங்களின் முடிவில் புள்ளிகள் பட்டியலில், தமிழ் தலைவாஸ் 9-ஆம் இடத்திலும், பெங்களூரு புல்ஸ் 12-ஆவது இடத்திலும், ஹரியாணா முதலிடத்திலும், மும்பா 6-ஆவது இடத்திலும் உள்ளன.