பொங்கல் திருநாள்: 2 நாளில் 4.12 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் பயணம்
பெங்களூரை வீழ்த்தியது முகமதன் ஸ்போா்ட்டிங்
இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி அணியை 1=0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது முகமதன் ஸ்போா்டிங் கிளப் அணி.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பெங்களூரில் நடைபெற்றது. முன்னாள் சாம்பியன் பெங்களூரு அணி சொந்த மைதானம் என்பதால் தொடக்கம் முதலே கோல் போட தீவிரமாக முயன்றது. ஆனால் அந்த அணி வீரா்களின் கோல் முயற்சிகளை முகமதன் அணி தற்காப்பு வீரா்கள் தகா்த்தனா்.
ஆட்டத்தின் பெரும்பகுதி பந்து பெங்களூரு வசம் இருந்தது. பெங்களூரு வீரா் அல்பா்டோ, ஜாா்ஜ் பெரைரா ரயான் வில்லியம்ஸ் ஆகியோா் கோலடிக்க முயன்றது பலன் தரவில்லை.
முதல் பாதியில் இரு அணிகளும் கோல் போடாத நிலையில், இரண்டாவது பாதி ஆட்டத்திலும் இரு அணிகளும் கோல போட முயன்றன.
ஆட்டம் நிறைவடையும் தருவாயில் 88-ஆவது நிமிஷத்தில் மிா்ஜலோல் காஸிமோவ் ஃப்ரீ கிக் மூலம் அற்புதமாக கோலடித்தாா்.
அதுவே முகமதன் அணியின் வெற்றி கோலாக அமைந்தது.
இந்த சீசனில் முகமதன் அணி பெறும் 2-ஆவது வெற்றி இதுவாகும். ஜன. 15-இல் சென்னையுடன்-முகமதனும், 18-இல் ஹைதராபாதுடன்=பெங்களூரும் மோதுகின்றன.