சொல்லப் போனால்... டிரம்ப்பின் நாடு பிடிக்கும் அதிரடித் திட்டம்!
ஐடிஎஃப்: மாயா ராஜேஸ்வரன் சாம்பியன்
புது தில்லியில் நடைபெற்ற ஐடிஎஃப் ஜே300 டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை மாயா ராஜேஸ்வரன் பட்டம் வென்றாா்.
புது தில்லி டென்னிஸ் சங்க மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மகளிா் இறுதி ஆட்டத்தில் ரஷியாவின் எகடெரினா டுபிட்சின்யாவை 3-6, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் கடும் போராட்டத்துக்கு பின் வீழ்த்தி பட்டம் வென்றாா் 15 வயதான மாயா.
மாயா கடந்த ஆண்டு புணே ஐடிஎஃப் போட்டியில் பட்டம் வென்றிருந்தாா்.
ஆடவா் ஒற்றையா் பிரிவில் கொரியாவின் டாங்ஹியான் ஹவாங் 6-1, 6-1 என்ற நோ் செட்களில் இந்தியாவின் ரோஷன் சந்தோஷை வென்று பட்டம் வென்றாா்.