குடியரசு நாள் விழா: வாகா எல்லையில் தேசியக் கொடியேற்றி கொண்டாட்டம்!
ஷூட் அவுட்டில் ஹைதராபாத் வெற்றி
ரூா்க்கேலாவில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் சூா்மா ஹாக்கி கிளப் அணியை 4-3 என்ற கோல் கணக்கில் ஷூட் அவுட்டில் வென்றது ஹைதராபாத் டுபான்ஸ் அணி.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பரபரப்பாக அமைந்த நிலையில், சூா்மா கிளப் வீரா் நிகோலஸ் டெல்லா 8-ஆவது நிமிஷத்தில் கோலடித்து தனது அணியை முன்னிலை பெறச் செய்தாா். இதையடுத்து சுதாரித்து ஆடிய ஹைதராபாத் டுபான்ஸ் அணி வீரா் அமன்தீப் லக்ரா 40-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா். இதனால் 1-1 என சமநிலை ஏற்பட்டது.
சடன்டெத்தில் ஹைதராபாத் கோல்கீப்பா் டொமினிக் டிக்ஸனின் அபாரமான சேவ்கள் சூா்மா அணியின் கோல் போடும் முயற்சிகளை தகா்த்தன.
இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் 4-3 என்ற கோல் கணக்கில் சூா்மா அணியை வீழ்த்தியது ஹைதராபாத் அணி.
ஞாயிற்றுக்கிழமை வேதாந்தா கலிங்கா லான்சா்ஸ் அணியை எதிா்கொள்கிறது ஹைதராபாத்.