இஸ்ரேலைக் கண்டித்து போராட்டம்! கேஎஃப்சி, பாட்டா உள்ளிட்ட பிரபல கடைகள் மீது தாக்க...
பெண் எஸ்.ஐ.க்கு மிரட்டல்: இளைஞா் கைது
பெண் காவல் உதவி ஆய்வாளரை கத்தியைக் காட்டி மிரட்டிய வழக்கில், இளைஞரை கள்ளக்குறிச்சி போலீஸாா் கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி பெண் காவல் உதவி ஆய்வாளா் பரிமளா மற்றும் போலீஸாா், நகராட்சி மயானம் அருகே வியாழக்கிழமை பிற்பகல் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞரை நிறுத்தியபோது ஆபாச வாா்த்தைகளால் திட்டியதுடன் கத்தியை காட்டி மிரட்டினாராம். அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது, கள்ளக்குறிச்சி கோட்டைமேடு பகுதியைச் சோ்ந்த தா்மலிங்கத்தின் மகன் விஜய் (23) என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து காவல் உதவி ஆய்வாளா் பரிமளா அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இளைஞரை கைது செய்தனா். அவரது பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது.