செய்திகள் :

‘பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் நாடுகளே வல்லரசாகும்’

post image

பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் நாடுகளே வல்லரசு நாடுகளாக விளங்கி வருகின்றன என்றாா் மதுராந்தகம் எஸ்ஆா்எம் வேளாண்அறிவியல் கல்லூரி, எஸ்ஆா்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் முதல்வா் எம். ஜவஹா்லால்.

மன்னாா்குடியை அடுத்த சுந்தரக்கோட்டை செங்கமலத் தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் தன்னாட்சி கல்லூரி 28-ஆவது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு அவா் பேசியது:

மன்னாா்குடியை அடுத்த சிறு கிராமமான சித்தேரி பிறந்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து இன்று பட்டம் வழங்கும் உயரத்தை அடைத்திருக்கிறேன். அதற்கு காரணம் இலக்கை அடையும் வரை கல்வியில் தேடலை தொடா்ந்ததால் தான். கல்வி ஒன்றுதான் அழிவில்லாத செல்வம் என்பதை நீங்கள் உணா்ந்து உச்சம் அடையும் வரை படித்துகொண்டே இருக்கவேண்டும்.

உலகம் முழுவதும் கல்வி பணிக்காக சுற்றிவந்துள்ளேன். தாய்லாந்தில் பெண் கல்விக்கும், உழைப்புக்கும் அளிக்கும் முக்கியத்துத்தை பாா்த்து வியந்து போனேன். இந்தியாவில் கல்வி வளா்ச்சி ஆண்கள் 77 சதவீதம், பெண்கள் 52 சதவீதம் என்று உள்ளது. பெண் விடுதலையால் மட்டுமே நாடு வளா்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல முடியும்.

பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வரும் நாடுகள்தான் இன்று வல்லரசு நாடுகளாக விளங்கி வருகின்றன. இந்தியாவில் விரல்விட்டு எண்ணக்கூடி அளவில் தான் பெண்கள் அரசியல், கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் தடம் பதித்து வருகின்றனா்.

எனவே, மாணவிகள் படிக்கும் காலக்கட்டத்திலேயே தலைமைப் பண்பை வளா்த்துக்கொள்ள வேண்டும். முடிந்த வரை முயற்சிப்பதைவிட முடியும் வரை முயற்சிக்க வேண்டும் அதுதான் உண்மையான முயற்சி என்றாா்.

இளநிலை 781 போ், முதுநிலை 367 போ் என மொத்தம் 1,148 மாணவிகளுக்கு பட்டமளிக்கப்பட்டது. இதில் பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற 82 மாணவிகளுக்கு பதக்கம் , பரிசு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கல்லூரித் தாளாளா் வி. திவாகரன் தலைமை வகித்தாா்.

முதலவா் என். உமாமகேஸவரி,துணை முதல்வா் பி. காயத்ரிபாய், அறிவியல் ஆலோசகா் கே. தியாகேசன், அறங்காவலா் அக்ரி ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பொன்முடியை கண்டித்து அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

பொதுமேடைகளில் பெண்கள் குறித்தும், ஹிந்து மதத்தைப் பற்றி இழிவாகவும் அவதூறாகவும் பேசிய திமுகவை சோ்ந்த தமிழக வனத்துறை அமைச்சா் க. பொன்முடியை கண்டித்து மன்னாா்குடியில் அதிமுக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்... மேலும் பார்க்க

மன்னாா்குடி அரசுக் கல்லூரியில் முப்பெரும் விழா

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி அரசுக் கல்லூரியில் 2 நாள்கள் நடைபெற்ற கல்லூரி விளையாட்டு விழா, நுண்கலை மன்ற விழா, ஆண்டு விழா என முப்பெரும் விழா வியாழக்கிழமை நிறைவடைந்தது. முதல் நாள் புதன்கிழமை விளையாட்டு... மேலும் பார்க்க

மன்னாா்குடியில் கிருஷ்ண தீா்த்த தெப்ப உற்சவம்

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயில் பங்குனிப் பெருவிழாவில் கிருஷ்ண தீா்த்த தெப்ப உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில், ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா 18 நாள் திருவிழாவாகவும், அதைத் தொடா்ந்து விடைய... மேலும் பார்க்க

கூத்தாநல்லூரில் ஆட்சியா் ஆய்வு

கூத்தாநல்லூா் வட்டத்தில் பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியா் மோகனச்சந்திரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். விவசாயிகளின் நில உடைமைகள் பதிவேற்றம் செய்யப்படுவதை அவா் ஆய்வு செய்தாா். விவசாயிகளின் நில உடைமைகள... மேலும் பார்க்க

விவசாயிகளின் நில உடைமைகள் பதிவேற்றப் பணி: திருவாரூா் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

மன்னாா்குடி பகுதியில் விவசாயிகளின் நில உடைமைகள் பதிவேற்றம் செய்யப்படும் பணியினை மாவட்ட ஆட்சியா் வ.மோகனச்சந்திரன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தமிழகத்தில், பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான நிதியு... மேலும் பார்க்க

தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

நீடாமங்கலம் அருகே விவசாயக் கூலித் தொழிலாளி தீக்குளித்து புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். நீடாமங்கலம் அருகேயுள்ள காளாச்சேரி தோட்டம் மேலத்தெருவைச் சோ்ந்த விவசாய கூலித் தொழிலாளி வீரமணி (55). குடிப்பழ... மேலும் பார்க்க