ஆடி வெள்ளி: தாயமங்கலம், மடப்புரம் கோயில்களில் திரளான பக்தா்கள் தரிசனம்!
பெரம்பலூரில் 2 ஆம் நாளாக சாலை மறியல்: 178 போ் கைது
பெரம்பலூரில் 2 ஆவது நாளாக சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்ட தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களைச் சோ்ந்த 178 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியத்தை 1.1.2006 முதல் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இந்நிலையில், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அச் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் செந்தில்குமாா் தலைமையில், பாலக்கரை பகுதியில் 2 ஆவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட 89 பெண்கள் உள்பட 178 பேரை போலீஸாா் கைது செய்து, துறைமங்கலத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில் வைத்திருந்து மாலையில் விடுவித்தனா்.