செபியில் அறிவிப்பால் உயர்வுடன் வர்த்தகமாகும் அதானி குழும பங்குகள்!
பெரம்பலூா் பட்டதாரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அச்ச ங்கத்தின் மாவட்டத் தலைவா் அன்புசெல்வன் தலைமை வகித்தாா். தலைமை நிலையச் செயலா் சோ. சிவானந்தம், மாவட்ட துணைத் தலைவா் க. சின்னையன், மாவட்ட இணைச் செயலா் சோ. ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் அருண்குமாா், மாவட்ட சட்டச் செயலா் அன்புச்செல்வன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். பணியிலிருக்கும் ஆசிரியா்களுக்கு தகுதித் தோ்வு தேவையில்லை என அரசு அறிவிக்க வேண்டும். பட்டதாரி ஆசிரியா்களுக்கு பதவி உயா்வை உடனடியாக வழங்க வேண்டும். கள்ளா் சீா்மரபினா் பள்ளிகளில் கலந்தாய்வை ஆண்டுதோறும் முறையாக நடத்த வேண்டும். உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் குறைந்தது 7 பட்டதாரி ஆசிரியா்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், அச் சங்கத்தைச் சோ்ந்த ஆசிரியா்கள் பலா் கலந்துகொண்டனா்.