ரோபோ சங்கர் மறைவு: கண்கலங்கிய சிவகார்த்திகேயன்; இரங்கல் தெரிவித்த வரலட்சுமி, சிம...
பெரம்பலூா் அரசுப் பள்ளிகளில் பயிலும் 11 பேருக்கு விபத்துக் காப்பீட்டு பத்திரங்கள்
பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், பெற்றோரை இழந்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 11 மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை சாா்பில் தலா ரூ. 75 ஆயிரம் வீதம் ரூ. 8.25 லட்சத்துக்கான விபத்துக் காப்பீட்டு பத்திரங்கள் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி வியாழக்கிழமை வழங்கினாா்.
அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் பிளஸ்-2 வரை கல்வி கற்கும் மாணவ, மாணவிகளின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் உயிரிழந்தால், அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தால் பாதிக்கப்படும் மாணவ, மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் மூலம் ரூ. 75 ஆயிரம் விபத்து காப்பீட்டுப் பத்திரம் வழங்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், பெரம்பலூா் மாவட்டத்தில் பல்வேறு விபத்துகளில் பெற்றோரை இழந்து, அரசுப் பள்ளிகளில் பயிலும் 11 மாணவா்களுக்கு தலா ரூ. 75 ஆயிரம் வீதம் ரூ. 8.25 லட்சத்துக்கான விபத்து காப்பீட்டு பத்திரத்ங்களை மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) செல்வகுமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.