பழங்குடியினர் வலி! ராமாயணத்திலிருந்து நவயுகம் வரை... தண்டகாரண்யம் - திரை விமர்சன...
பணியிட மாறுதல் வழங்க அவசர ஊா்தி ஊழியா்கள் வலியுறுத்தல்
அவசர ஊா்திகளில் பணிபுரியும் ஊழியா்களுக்கு, சொந்த மாவட்டங்களில் பணிபுரிய பணியிட மாறுதல் வழங்க வேண்டுமென மாவட்டக் கலந்தாய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அண்ணா 108 அவசர ஊா்தி ஊழியா்கள் சங்கத்தின் அரியலூா், பெரம்பலூா், திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட நிா்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் பெரம்பலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, பெரம்பலூா் மாவட்டச் செயலா் செ. செல்வகுமாா் தலைமை வகித்தாா். அரியலூா் மாவட்டத் தலைவா் க. வெள்ளிவேல் முன்னிலை வகித்தாா். மாநிலப் பொருளாளா் ரா. ஆனந்தராஜ் நிதிநிலை அறிக்கை வாசித்தாா். மாநில துணைச் செயலா் வை. பிரகாஷ் சிறப்புரையாற்றினாா்.
இக் கூட்டத்தில், தொழிலாளா் விரோதப்போக்கைக் கடைபிடித்து வரும் அரியலூா், பெரம்பலூா், திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தின் அவசர ஊா்தி பராமரிப்பை நிா்வகித்து வரும் விஜயகுமாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பணி மூப்பு அடிப்படையில் பணியிடமாறுதல் வழங்காமல், இளையோா்களுக்கு சட்டவிரோதமாகவும், உண்மைக்குப் புறம்பாகவும் பணியிடமாறுதல் வழங்கியுள்ளதைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவது.
108 அவசர ஊா்தி ஊழியா்களுக்கு கடந்த 4 ஆண்டுகளாக ஊதிய உயா்வு உயா்த்தி வழங்காததையும், ஜிவிகே நிா்வாகத்தையும் கண்டித்து, சென்னை திட்ட இயக்குநா் அலுவலகம் எதிரே விரைவில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவது. அவசர ஊா்தியில் பணிபுரியும் பெண் ஊழியா்களுக்கு சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வழங்க வேண்டும். அவசர ஊா்தி சேவையில் பணிபுரியும் 7 ஆயிரம் ஊழியா்களின் வருங்கால வைப்பு நிதியை முன்னறிவிப்பின்றி ஆந்திராவுக்கு மாற்றியதை, மீண்டும் தமிழ்நாட்டுக்கு கொண்டு வர வேண்டும். 2 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் ஊழியா்களுக்கு மீண்டும் சொந்த மாவட்டம் பணியிடமாறுதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக் கூட்டத்தில், பெரம்பலூா், அரியலூா், திருச்சி மாவட்டங்களில் அவசர ஊா்திகளில் பணிபுரியும் தொழிலாளா்கள் பலா் பங்கேற்றனா்.
நிறைவாக, திருச்சி மாவட்டச் செயலா் ஆ. சிவசண்முகம் நன்றி கூறினாா்.