தமிழக அரசின் தடங்கல்களை விஜய் எதிா்கொள்ளத்தான் வேண்டும்: கே.அண்ணாமலை
ஊரக வளா்ச்சித் துறையினா் ஆா்ப்பாட்டம்
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகிய திட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களில், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலா்களை நியமனம் செய்ய வேண்டும். மகளிா் திட்ட அலுவலகங்களில் தனியாா் மூலம் அலுவலா்கள் நியமனம் செய்வதை தவிா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட 25 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா், வேப்பூா், வேப்பந்தட்டை மற்றும் ஆலத்தூா் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டங்களில், அச் சங்கத்தைச் சோ்ந்த பலா் பங்கேற்றனா்.