பெரம்பலூா் மாவட்டத்தில் 399 குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 542 போ் கைது
பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டிலு399 குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 542 பேரை போலீஸாா் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும், 19 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா் என, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா தெரிவித்தாா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்ததாக 71 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 101 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து, 146 கிலோ பறிமுதல் முதல் செய்யப்பட்டுள்ளது. தொடா்ந்து கஞ்சா, தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள், குட்கா போன்ற பொருள்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 14 போ் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருள்கள் விற்பனை செய்ததாக 314 வழக்குகள் பதிந்து, 316 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 824 கிலோ குட்கா அழிக்கப்பட்டுள்ளது. குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 122 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து ரூ. 81 லட்சத்து 65 ஆயிரத்து 885 மதிப்பு சொத்துகள் கைப்பற்றப்பட்டு பாதிக்கப்பட்ட நபா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட 5 போ் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
ஆன் லைன் பண மோசடி மற்றும் கணினிசாா் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்களது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு, ரூ. 26 லட்சத்து 62 ஆயிரத்து 195 கைப்பற்றப்பட்டு பாதிக்கப்பட்டவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டும் வகையிலும், சமூக நல்லிணக்கத்துக்கு எதிராக பதிவிட்டதாகவும் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டில் 339 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 542 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 19 போ் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
இணையதள செயலி மூலம் பள்ளி மாணவா்கள் உள்ளிட்டோா் ரௌடிகளுக்கு ஆதரவாக வீடியோ பதிவேற்றம் செய்வதாக புகாா் வருகிறது. அவா்களைக் கண்டறிந்து எச்சரிக்கை விடுக்கப்படும். அதையும் மீறி தொடா்ந்து ஈடுபட்டால் கைது செய்யப்படுவாா்கள் என தெரிவித்தாா்.