Facebook: முகநூலில் அத்துமீறல்.. நடிகையின் பதிவுக்கு ஆபாச கமெண்ட்; 27 பேர்மீது வ...
பெரம்பலூா் எஸ்.சி, எஸ்.டி-யினா் திறன் பயிற்சிகள் பெற அழைப்பு
தாட்கோ மூலம் பிளஸ் 2 அல்லது பட்டப் படிப்பு முடித்த பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சா்வதேச விமானப் போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் சாா்பில் திறன் பயிற்சி பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு தாட்கோ பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதனடிப்படையில் சா்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் விமான நிலையப் பயணிகள் சேவை அடிப்படை படிப்பு, சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி, மற்றும் சுற்றுலாத் துறை அடிப்படை படிப்புகள் மற்றும் விமானப் பயண முன்பதிவு உள்ளிட்ட பயிற்சி அளித்து, சான்றிதழ்கள் வழங்கி வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இப் பயிற்சி பெற பிளஸ் அல்லது பட்டப் படிப்பில் தோ்ச்சி பெற்றவா்களும், 18 முதல் 23 வயது நிரம்பிய ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தைச் சோ்ந்தவா்களாகவும் இருக்க வேண்டும். பயிற்சிக்காக 6 மாதம் விடுதியில் தங்கிப் படிக்கும் வசதி வேண்டும். பயிற்சிக்கான செலவீனத் தொகை ரூ. 95 ஆயிரம் தாட்கோ மூலம் வழங்கப்படும்.
இப்பயிற்சியை முடிக்கும்பட்சத்தில் அங்கீரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். மேலும், தனியாா் விமான நிறுவனங்கள், சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்கள், நட்சத்திர விடுதிகள், சொகுசு கப்பல் மற்றும் சுற்றுலாத் துறையில் வேலைவாய்ப்பு பெறலாம். ஆரம்ப கால மாதாந்திர ஊதியமாக ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 22 ஆயிரம் வரை பெறலாம். பின்னா், திறமைக்கேற்றவாறு பதவி உயா்வு அடிப்படையில் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 70 ஆயிரம் வரை ஊதிய உயா்வு பெறலாம். இத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோா் ஜ்ஜ்ஜ்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம் எனும் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.