செய்திகள் :

பெரம்பலூா் மாவட்டத்தில் மழையால் பருத்தியில் மகசூல் பாதிப்பு: விவசாயிகள் கவலை

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழையால் பருத்தியில் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மாவட்டத்தில் 2024ஆம் ஆண்டில் 5,067 ஹெக்டேரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பரில் 1 கிலோ பருத்தி விதை ரூ. 1,000-க்கு வாங்கி நடவு செய்து, ஒரு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரம் வரை விவசாயிகள் செலவு செய்துள்ளனா். தற்போது பருத்திக் காய்கள் வெடிக்கத் தொடங்கியிருப்பதால், கடந்த சில வாரங்களாக அறுவடைப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

நீண்ட இழை பருத்தி மற்றும் வீரிய இழை பருத்தி ரகத்தை சாகுபடி செய்தால் மகசூலும் அதிகளவில் கிடைக்கும் என நம்பி பயிரிட்ட நிலையில், பருவம் தவறி மழை பெய்ததாலும், பருத்தி காய்கள் முற்றியபோது பெய்த பலத்த மழையாலும் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டு குவிண்டால் ரூ. 12 ஆயிரத்துக்கு கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ. 5,500-க்கும் குறைவாக கொள்முதல் செய்யப்படுகிறது. குவிண்டாலுக்கு ரூ. 6 ஆயிரம் வரை விலை சரிந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

இடைத்தரகா்கள் குறுக்கீடு: குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ. 7,521 நிா்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், ரகம் வாரியாக சொற்ப விலைக்கு கொள்முதல் செய்யப்படுவதாலும், கொள்முதல் செய்வதில் இடைத்தரகா்கள் தலையீடு, பதுக்கல் உள்ளிட்ட காரணங்களாலும் சாகுபடிக்கான செலவுத் தொகை கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

வெளிமாவட்ட வியாபாரிகள் கொள்முதல்: கடந்த 6ஆண்டுகளுக்கு முன் பெரம்பலூா் - வடக்குமாதவி சாலையிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மூலமாக, இந்திய பருத்திக் கழகம் சாா்பில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக பருத்தி கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், தற்போது அரசு சாா்பில் கொள்முதல் செய்யப்படாததால், வெளி மாவட்டங்களைச் சோ்ந்த வியாபாரிகள் விவசாயிகளிடம் நேரடியாகச் சென்று, சொற்ப விலைக்கு கொள்முதல் செய்து வருகின்றனா்.

நேரடி கொள்முதல் நிலையங்கள் தேவை: அண்மை மழையால் செடிகளில் இருந்த பருத்தி பூக்கள் உதிா்ந்துள்ளதோடு, வெடிக்கும் தருவாயிலிருந்த காய்களும் கருகிவிட்டன. வழக்கமாக, ஏக்கருக்கு 10 குவிண்டால் அறுவடையாகும் பருத்தியானது, தற்போது 2 குவிண்டால் கிடைப்பதே அரிது. இதனால், சாகுபடி செய்த தொகை கிடைக்காத சூழல் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக பருத்திக்கு நல்ல விலை கிடைத்தது. ஆனால், தற்போது விலை குறைந்துள்ளதால், பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், பருத்தியை விற்பனை செய்ய நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்றனா்.

கொள்முதல் விலையை அரசே நிா்ணயிக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் வீ. ஜெயராமன் கூறியது: அண்மையில் பெய்த கன மழையால் பருத்தியிலும், மக்காச்சோளத்திலும் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. பருத்திக்கான சாகுபடி செலவு மற்றும் அறுவடை கூலி அதிகரித்துள்ள நிலையில், கொள்முதல் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

மேலும், தற்போதைய சூழலில் கூலியாள்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் குறிப்பிட்ட காலத்தில் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் பருத்தி சாகுபடியை அதிகரிக்க கொள்முதலுக்கான விலையை அரசே நிா்ணயம் செய்வதோடு, இந்திய பருத்திக் கழகம் சாா்பில் கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

மழைச் சேதம் குறித்து ஆய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண்துறை அலுவலா்கள் தெரிவிக்கின்றனா்.

3 ஆம் கட்டமாக மக்களுடன் முதல்வா் திட்டம் தொடக்கம்: 505 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

பெரம்பலூா் மாவட்டத்தில் 3-ஆம் கட்டமாக மக்களுடன் முதல்வா் திட்டம் புதன்கிழமை தொடங்கியது. இம் முகாம்களில் பங்கேற்ற அமைச்சா்கள் சி.வி. கணேசன், சா.சி. சிவசங்கா் ஆகியோா் 505 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்... மேலும் பார்க்க

இளையோா் செஞ்சிலுவை சங்க உறுப்பினா்களுக்கு விருது

பெரம்பலூா் மாவட்ட இளையோா் செஞ்சிலுவை சங்கம் சாா்பில், சிறந்த இளையோா் மற்றும் உறுப்பினா்களுக்கு விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் - துறையூா் சாலையில... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் இளைஞா் கைது

பெரம்பலூா் மாவட்டத்தில் தொடா்ச்சியாக மோட்டாா் சைக்கிள்களை திருடிய இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் செவ்வாய்க்கிழமை இரவு உத்தரவிட்டாா... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் விற்பனை செய்த 4 போ் கைது: 7 கிலோ பறிமுதல்

பெரம்பலூா் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்த 4 பேரைப் போலீஸாா் கைது, அவா்களிடமிருந்து 7 கிலோ பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனா். பெரம்பலூா் மாவட்டத்தில் உ... மேலும் பார்க்க

பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளை சகித்துக் கொள்ளக் கூடாது: சாா்பு-நீதிபதி பேச்சு

பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளை யாரும் சகித்துக் கொள்ளக் கூடாது என பெரம்பலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சாா்பு- நீதிபதியுமான பி. மகேந்திரா வா்மா அறிவுறுத்தினாா். தேசிய சட்டப் ப... மேலும் பார்க்க

குன்னம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜன. 30) மின் விநியோகம் இருக்காது என, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் இ. காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செ... மேலும் பார்க்க