சாம்சன் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா.. யாரும் எதிர்பார்க்காத அதிரடி தள்ளுபடியில்!
பெரியாரின் பேரன்... தவெக மாநாட்டில் விஜய்யின் குரலில் ஒலிக்கும் கொள்கைப் பாடல்!
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாட்டில் விஜய்யின் குரலில் உருவான, அக்கட்சியின் கொள்கைப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின், 2-வது மாநில மாநாடு இன்று (ஆக.21) நடைபெற்று வருகின்றது. இந்த மாநாட்டில் அக்கட்சியின் கொள்கைப் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்தப் பாடலானது, தவெக தலைவர் விஜய்யின் குரலில் உருவாகியுள்ள நிலையில், ”உங்க விஜய் வரேன்!”, “பெரியாரின் பேரன் வரான்!”, “எளியவர்களின் குரல்” போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளன.
இப்பாடலானது, பின்னணியில் ஒலிக்க தவெக தலைவர் விஜய் மாநாட்டின் அரங்கிற்கு வருகை தந்தார். அப்போது, அங்கு அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக நடைமேடையில் (ரேம்ப்) தொண்டர்களின் ஆராவாரத்துக்கு மத்தியில் தவெக கொடியை தலையில் கட்டிக்கொண்டு ரேம்ப் வாக்கில் ஈடுபட்டார்.
முன்னதாக, இந்த மாநாட்டில் தவெக-வின் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தவெக மாநாட்டு மேடைக்கு வந்தார் விஜய்!