பெருமையின் உச்சத்தில் தீபக் குடும்பம்! பிக் பாஸில் ஆனந்தக் கண்ணீர்!
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள நடிகர் தீபக்கால், அவரின் குடும்பத்தினர் பெருமையடைவதாகத் தெரிவித்துள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் முக்கிய நோக்கங்களில் ஒன்று, தனது மகன் தன்னை நினைத்து பெருமையாக உணர வேண்டும் என தீபக் கூறியிருந்தார்.
தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஒருநாள் விருந்தினராக வந்துள்ள தீபக்கின் மனைவி ரஞ்சனி மற்றும் மகன், தீபக்கை நினைத்து பெருமையடைவதாகத் தெரிவித்துள்ளனர்.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 12வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்தில் கேப்டன் இன்றி பிக் பாஸ் வீடு செயல்படுகிறது. இதனிடையே இந்த வாரத்தின் ஒவ்வொரு நாளும் போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளனர்.
பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில், அவரின் குடும்பத்தில் இருந்து நெருங்கியவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
முதல் நாளான இன்று தீபக் வீட்டில் இருந்து அவரின் மனைவி ரஞ்சனி, மகன் பங்கேற்றிருந்தனர். பிக் பாஸ் வீட்டில் நுழைந்த குடும்பத்திரனைக் கண்டு, தீபக் இன்ப அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் வீட்டில் உள்ள சக போட்டியாளர்களுக்கு தீபக் தனது குடும்பத்தை அறிமுகம் செய்து வைத்தார்.
இதில் பேசிய தீபக்கின் மனைவி, உங்களை நினைத்து பெருமையின் உச்சத்தில் உள்ளதாகக் குறிப்பிட்டார். இதேபோன்று அவரின் மகனும் தந்தை தீபக்கை நினைத்து பெருமையடைவதாகக் கூறினார்.
இதனால் தீபக் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். பிக் பாஸ் வீட்டிற்கு வந்த தீபக்கின் இலக்கு நிறைவேறியுள்ளதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.