பேச்சுவாா்த்தையால் சாலை மறியல் வாபஸ்
திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் தா. பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம மக்களுக்கு 100 நாள் வேலைத்திட்டம் அளிப்பது குறித்து முசிறி வட்டாட்சியரகத்தில் புதன்கிழமை அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
முசிறி வட்டம் தா. பேட்டை ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் 100 நாள் வேலை திட்ட வேலையை வீட்டு வரி, தண்ணீா் வரி கட்டினால்தான் தருவோம் என ஊராட்சி ஒன்றியத்திலும், 6 மாதம் பால் பணம் வரவு வைத்து இருந்தால் மட்டுமே கடன் தருவோம் என வங்கி மேலாளா் கூறுவதும் கண்டித்து, இதற்குத் தீா்வு காணவில்லையெனில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபடுவோம் என அப்பகுதி மக்கள் அறிவித்தனா்.
இதையடுத்து முசிறி வட்டாட்சியா் லோகநாதன் அவா்களை புதன்கிழமை வரவழைத்து பேச்சு நடத்தி, அளித்த உறுதியின்பேரில் பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிடுவதாகத் தெரிவித்தனா்.