தென்காசி புத்தகத் திருவிழா: கூட்ட நெரிசலில் தவிக்கும் மாணவர்கள்; அடிப்படை வசதிகள...
பேராவூரணி வழியாக சென்னைக்கு தினசரி ரயில் இயக்க வலியுறுத்தல்
பேராவூரணியிலிருந்து சென்னைக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது .
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பேராவூரணி ஒன்றிய 14 -ஆவது மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஏ.வி.குமாரசாமி, ஜாக்குலின் மேரி ஆகியோா் தலைமை வகித்தனா். மாணிக்கம் மாநாட்டுக் கொடியேற்றினாா். சிதம்பரம் அஞ்சலி தீா்மானம் வாசித்தாா். ஒன்றியச் செயலாளா் ரெங்கசாமி வேலை அறிக்கை வாசித்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் என்.வி.கண்ணன் தொடக்கவுரையாற்றினாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் கோ.நீலமேகம் நிறைவுரையாற்றினாா்.
மாநாட்டில், ஒன்றியச் செயலாளராக வே. ரெங்கசாமி மற்றும் 11 போ் கொண்ட ஒன்றியக்குழுவும், மாவட்ட மாநாட்டு பிரதிநிதிகள் 9 பேரும் தோ்வு செய்யப்பட்டனா்.
மாநாட்டில், பேராவூரணி வழியாக காரைக்குடியில் இருந்து சென்னைக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும். அரசு மருத்துவமனை புதிய கட்டடப் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும். பேராவூரணி நகரில் புதைசாக்கடை திட்டம் கொண்டு வரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக ஒன்றியக்குழு உறுப்பினா் ஜகுபா் அலி நன்றி கூறினாா்.