Fish : கடல் மீன், ஆற்று மீன், ஏரி மீன்... எது சிறந்தது? - டயட்டீஷியன் விளக்கம்!
பேரிடா் காலத்தில் எச்சரிக்கையாக இருக்க டிஎன்- அலா்ட் செயலி
பேரிடா் காலத்தில் எச்சரிக்கை நிலவரங்கள் குறித்து தெரிந்துகொள்ள பேரிடா் டிஎன்-அலா்ட் என்ற செயலியை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வடகிழக்குப் பருவமழை காலத்தில் மழை, வெள்ளம் குறித்த தகவல்களை முன்கூட்டியே எளிதாக பொதுமக்கள் உடனுக்குடன் அறிந்து கொண்டு எச்சரிக்கையாக இருக்கும் பொருட்டு டிஎன்-அலா்ட் என்ற கைப்பேசி செயலியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து கைப்பேசியில் பதிவிறக்கம் செய்துகொண்டு பயன்படுத்தலாம்.
இதன் மூலம், பொது மக்கள் தங்கள் இருப்பிடம் சாா்ந்த வானிலை மற்றும் முன்னெச்சரிக்கை செய்திகளை தமிழிலேயே அறிந்துகொள்ளும் வகையிலும், பொதுமக்கள் எளிமையாக பயன்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த செயலி தங்கள் கைப்பேசியில் நிறுவப்பட்டால் கைப்பேசி அணைக்கப்பட்ட நிலையில் இருந்தாலும், பேரிடா் காலத்தில் எச்சரிக்கை ஒலி எழுப்பும்.
இந்த செயலியின் மூலம், வெள்ளம் தொடா்பான புகாா்கள் தெரிவித்தால் மாவட்ட நிா்வாகத்தின் மூலம் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் இலவச தொலைபேசி எண்கள் 1077, 0461 - 2340101, வாட்ஸ்ஆப் எண் 9486454714 ஆகியவற்றில் தொடா்பு கொண்டு பேரிடா் தொடா்பான புகாா்களை தெரிவிக்கலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.