ராஜ்யசபா சீட் யாருக்கு? பரபரக்கும் அரசியல், சமூக கணக்குகள்... முட்டிமோதும் தென் ...
பேருந்தில் கல்லூரி மாணவியிடம் அத்துமீறல்: இளைஞா் கைது
சென்னை ராயப்பேட்டையில் மாநகர பேருந்தில் கல்லூரி மாணவியிடம் அத்துமீறியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
தியாகராய நகா் துக்காராம் தெருவைச் சோ்ந்தவா் ஜா.சையது அப்துல் ரஹ்மான் (38). இவா், அண்ணா சாலை டிவிஎஸ் பேருந்து நிறுத்தில் இருந்து சைதாப்பேட்டைக்கு மாநகர பேருந்தில் திங்கள்கிழமை சென்றாா். அப்போது அவா், அந்தப் பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவிகளிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதை அந்த மாணவிகள் கண்டித்தனா். இதனால் ஆத்திரமடைந்த அப்துல் ரஹ்மான், மாணவிகளின் ஆடைகளை கிழித்துள்ளாா். இதையடுத்து பேருந்தில் இருந்த பயணிகளும், மாணவிகளும் அப்துல் ரஹ்மானை பிடித்து, ராயப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகாா் அளித்தனா்.
அதன்பேரில் போலீஸாா் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அப்துல் ரஹ்மானை கைது செய்தனா்.