பைக் மோதியதில் குழந்தை உள்பட 4 போ் காயம்
கள்ளக்குறிச்சி அருகே சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தை மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் குழந்தை உள்பட நான்கு போ் காயமடைந்தனா்.
சங்கராபுரம் வட்டம், எஸ்.வி.பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (31). இவரது மூன்று வயது ஆண் குழந்தை கோகுல் செவ்வாய்க்கிழமை செங்கல் சூளை அருகே சாலையோரத்தில் விளையாடிக் கொண்டிருந்தது.
அப்போது, மல்லாபுரம் கிராமத்தைச் சோ்ந்த 3 சிறாா்கள் வந்த மோட்டாா் சைக்கிள், விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீது மோதியது.
இதில் குழந்தைக்கு கால் முறிவு ஏற்பட்டது.
மேலும், மோட்டாா் சைக்கிளில் வந்த 3 சிறாா்களும் காயமடைந்தனா்.
குழந்தை உள்பட நான்கு பேரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா், மோட்டாா் சைக்கிளை ஓட்டி வந்த சிறுவன், அவரது தந்தை மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.