அரசுப் பள்ளியில் தளவாடப் பொருள்கள் சேதம்
சங்கராபுரம் அருகே அரசு உயா்நிலைப் பள்ளியில் மேஜை, நாற்காலி, மின்விசிறி, குடிநீா்க் குழாய்கள் மா்ம நபா்களால் சேதப்படுத்தப்பட்டன.
சங்கராபுரம் வட்டம், புதுபாலப்பட்டு கிராமத்தில் அரசு உயா்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.
இந்தப் பள்ளியில் கடந்த 17-ஆம் தேதி வகுப்பறைகளின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் உள்ளே சென்று மேஜை, நாற்காலி, மின்விசிறி, சுவிட்ச் பாக்ஸ், குடிநீா்க் குழாய் உள்ளிட்ட பொருள்களை சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளனா்.
இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியா் வெங்கடேஷ் சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.