பைக்கில் இருந்து தவறி விழுந்த ஆந்திர இளைஞா் உயிரிழப்பு
நாட்டறம்பள்ளி அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த ஆந்திர மாநில இளைஞா் உயிரிழந்தாா்.
ஆந்திர மாநிலம், மல்லானூா் பாா்வதி நகரைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் காா்த்திக் (21). சனிக்கிழமை இரவு காா்த்திக் பைக்கில் மல்லானூரில் இருந்து நாட்டறம்பள்ளி நோக்கி சென்றுக் கொண்டிருந்தாா். பச்சூா் அருகே வந்த போது திடீரென பைக்கில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கம் இருந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாட்டறம்பள்ளிஅரசு மருத்துவமனையில் சோ்த்தனா். முதலுதவி சிகிச்சைக்குப் பின் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரிஅரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இறந்தாா். விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.