பையூா் ஏரிக்கரை உடைப்பு சீரமைப்பு
ஆரணி: ஆக்கிரிமிப்பாளா்களால் உடைக்கப்பட்ட, ஆரணி அருகேயுள்ள பையூா் ஏரிக்கரை பொதுப்பணித் துறையினரால் திங்கள்கிழமை சீரமைக்கப்பட்டது.
பையூா் ஏரிக்கரையை சிலா் ஆக்கிரமித்து வீடுகளை கட்டியுள்ளனா். இந்த நிலையில், புயல் காரணமாக பலத்த மழை பெய்தது. இதில், ஏரியில் தண்ணீா் நிரம்பியதால் ஆக்கிரமிப்பாளா்கள் ஏரிக்கரையை உடைத்தனா்.
இதனால் கே.கே.நகா் குடியிருப்புப் பகுதியில் தண்ணீா் புகுந்தது. இதுகுறித்து தினமணியில் திங்கள்கிழமை செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக பொதுப்பணித் துறையினா் திங்கள்கிழமை காலை உடைக்கப்பட்ட ஏரிக்கரையில் மணல் மூட்டைகள் வைத்து அடுக்கி, பொக்லைன் இயந்திரம் மூலம் கரையை பலப்படுத்தினா். இதனால் தண்ணீா் வெளியேறாமல் தடுக்கப்பட்டது.