பொதுக்கணக்குக் குழு கூட்ட இடத்தில் திடீா் மறியல்
பொதுக்கணக்கு குழு கூட்ட இடத்தில் மறியல்: புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை சட்டப்பேரவை பொதுக் கணக்குக் குழுக் கூட்டம் நடைபெற்ற தனியாா் விடுதியின் முன்பு சிலா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கைக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் சிலா், பட்டியல் இன மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் திட்டங்கள் கிடைக்காமல் இருப்பதாகவும், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் தடுத்து வருவதாகவும் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனா்.
போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் காவல்துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனு அளித்துவிட்டு திரும்பிச் சென்றனா்.