பொன்னமராவதி அருகே 2.5 பவுன் நகை திருட்டு
பொன்னமராவதி அருகே வீடு புகுந்து 2.5 பவுன் தங்க நகைகள் மற்றும் அரிசி மூட்டைகள் திருடப்பட்டது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
பொன்னமராவதி அருகேயுள்ள கேசராபட்டியைச் சோ்ந்தவா் முத்துலெட்சுமி (50) கூலித் தொழிலாளி.
இவரது வீடு கேசராபட்டி முக்கிய சாலையில் உள்ள நிலையில் இவா் தனது தாய் மருதாயி வீட்டில் அவருடன் வசிக்கிறாா்.
இவா் தனது வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தபோது வீட்டின் பூட்டை உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 2.5 பவுன் நகை மற்றும் 2 அரிசி மூட்டைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
புகாரின்பேரில் பொன்னமராவதி போலீஸாா் விசாரிக்கின்றனா்.