செய்திகள் :

பொறியியல் பணிகள்: புதுச்சேரி- விழுப்புரம் பயணிகள் ரயில்கள் 7 நாள்களுக்கு ரத்து

post image

பொறியியல் பணிகள் காரணமாக, விழுப்புரம்-புதுச்சேரி பயணிகள் ரயில் ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் 7 நாள்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால் ரயில்களின் போக்குவரத்தில் பகுதியளவு ரத்து, முழுமையான ரத்து, புறப்படும் இடம் மாற்றம் போன்ற பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சென்னை தாம்பரத்திலிருந்து காலை 9.45 மணிக்குப் புறப்படும் தாம்பரம் - விழுப்புரம் பயணிகள் ரயில்(வண்டி எண் 66045), ஆகஸ்ட் 30-ஆம் தேதி முண்டியம்பாக்கம் -விழுப்புரம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்.

தவெக மாநாட்டு மேடைக்கு வந்தார் விஜய்!

விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட வேண்டிய விழுப்புரம் -சென்னை கடற்கரைப் பயணிகள் ரயில் (வண்டி எண் 66046), விழுப்புரம் -முண்டியம்பாக்கம் இடையே ஜூன் 30-ஆம் தேதி பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ரயில் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.55 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும்.

விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 2.35 மணிக்குப் புறப்பட வேண்டிய விழுப்புரம் -மயிலாடுதுறை பயணிகள் ரயில் (வண்டி எண் 66019), ஆகஸ்ட் 30-ஆம் தேதி சுமார் 25 நிமிஷங்கள் தாமதமாக பிற்பகல் 3 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும்.

விழுப்புரத்திலிருந்து காலை 5.25 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் -புதுச்சேரி பயணிகள் ரயில் (வண்டி எண் 66063), புதுச்சேரி ரயில் நிலையத்திலிருந்து காலை 8.05 மணிக்குப் புறப்படும் புதுச்சேரி - விழுப்புரம் பயணிகள் ரயில் (வண்டி எண் 66064) ஆகியவை ஆகஸ்ட் 24,25,26 ,28,29,30,31 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூரிலிருந்து காலை 6.35 மணிக்குப் புறப்படும் எழும்பூர் - புதுச்சேரி பயணிகள் ரயில் (வண்டி எண் 66051) ஆகஸ்ட் 24,31-ஆம் தேதிகளில்சுமார் 15 நிமிஷங்களும், 26-ஆம் தேதி சுமார் 30 நிமிஷங்களும் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் இயக்கப்படும். குருவாயூரிலிருந்து இரவு 11.15 மணிக்குப் புறப்படும் குருவாயூர் -சென்னை எழும்பூர் விரைவு ரயில் (வண்டி எண் 16128) , ஆகஸ்ட் 27-ஆம் தேதி வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமார் 30 நிமிஷங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் இயக்கப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவுடன் நேரடிக் கூட்டணியும் மறைமுகக் கூட்டணியும்... யாரைச் சொல்கிறார் விஜய்?

பாஜகவுடன் ஒரு கட்சி நேரடியாகக் கூட்டணி வைத்திருக்கிறது, மற்றொரு கட்சி மறைமுகமாக கூட்டணியில் உள்ளது என்று தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளை விஜய் கடுமையாக விமர்சித்துப் பேசியிருக்கிறார்.மதுரை மாவட்டம் ... மேலும் பார்க்க

அண்ணா, எம்ஜிஆர், கேப்டன்.. தவெக மாநாட்டில் குறிப்பிடப்பட்ட திராவிடத் தலைவர்கள்!

தமிழக வெற்றிக் கழகத்தின், 2-வது மாநில மாநாட்டில் தமிழகத்தின் முக்கிய திராவிட கட்சிகளின் தலைவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு வருகின்றது. மதுரையில் நடைபெறும் தவெக-வின், 2-வது மாநில மாநாட்டில் இசையமைப்... மேலும் பார்க்க

கொள்கை எதிரி பாஜக; அரசியல் எதிரி திமுக! விஜய் பேச்சு

பாரபத்தி: தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக என்று குறிப்பிட்டார் கட்சித் தலைவர் விஜய்.தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்டம் பாரபத்தியில் தொடங்கி ... மேலும் பார்க்க

சிங்கம் வேட்டைக்கு மட்டுமே வெளியே வரும்: விஜய்

சிங்கம் வேட்டைக்கு மட்டுமே வெளியே வரும், வேடிக்கைப் பார்க்க வராது என்று தவெக மாநாட்டில் விஜய் பேசினார்.தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, மதுரை பாரப்பத்தியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொ... மேலும் பார்க்க

ரிதன்யா தற்கொலை வழக்கு: மூவருக்கு நிபந்தனை ஜாமீன்

ரிதன்யா தற்கொலை வழக்கில் அவரது கணவர், மாமனார் மற்றும் மாமியார் மூவருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகேயுள்ள கைகாட்டிபுதூரைச் சோ்ந்தவா் அண்ணாது... மேலும் பார்க்க

தவெக மாநாட்டுக்கு விஜய் வருகை! புறப்பட்ட தொண்டர்கள்!!

திருப்பரங்குன்றம்: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, மதுரை பாரப்பத்தியில் தொடங்கியது. விழா நடைபெறும் மேடைக்கு கட்சித் தலைவர் விஜய் வந்த நிலையில், அவரைப் பார்த்ததும், மாநாட்டுக்கு வந்திர... மேலும் பார்க்க